எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து பிரதமர் ஹரிராயாவைக் கொண்டாடுவார்

கோலாலம்பூர், மார்ச்.27-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எட்டு மாநிலங்களின் மக்களுடன் இணைந்து ஹரிராயா பெருநாளைக் கொண்டாடும் கலாச்சாரத்தை இந்த ஆண்டும் தொடரவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய அளவிலான ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வு, மலாக்காவில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார் என்று பிரதமரின் முதிர்நிலை ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS