கோலாலம்பூர், மார்ச்.27-
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பின்னிரவு 12.01 மணி முதல் சனிக்கிழமை முன்னிரவு 11.59 மணி வரை இரண்டு தினங்களுக்கு நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த டோல் கட்டணச் சலுகையைப் பயன்படுத்தி வாகனமோட்டிகள் பலர், இன்று பின்னிரவு முதல் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.