கோலாலம்பூர், மார்ச்.28-
உள்நாட்டுப் போரினால் பெரும் பதற்ற நிலைக்கு இலக்காகி உள்ள வட ஆப்பிரிக்க நாடானா சூடானின் தென் பகுதியில் உள்ள மலேசியர்கள், அங்கிருந்து வெளியேறும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
அந்த ஆப்பிரிக்க நாட்டில் இன்னமும் வர்த்தக விமானச் சேவைகளின் செயலாக்கம் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஆலோசனைக் கூறியுள்ளது.
அந்த நாட்டின் ஆகக் கடைசி நிலவரங்களின்படி மலேசியர்கள் அந்நாட்டில் இருப்பது, பாதுகாப்பானது அல்ல என்று உணரப்பட்டு இருப்பதால் இடர்களை எதிர்கொள்வதிலிருந்து தவிர்க்க அந்நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக சூடானில் துணை இராணுவத்தினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தலைநகர் Khartoum மை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால், அந்த நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது.