கோலாலம்பூர், மார்ச்.28-
வரும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அக்கட்சியின் துணை தலைமைச் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் அறிவித்துள்ளார்.
நான்கு உதவித் தலைவர் பதவிகளில் ஒன்றைக் கைப்பற்ற கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதித் தலைவரான டாக்டர் சத்திய பிரகாஷ் குறிவைத்துள்ளார்.
உலு சிலாங்கூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் இதர தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதெனத் தாம் முடிவு செய்துள்ளதாக டாக்டர் சத்திய பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொழில் ரீதியாக ஒரு மருத்துவரான டாக்டர் சத்திய பிரகாஷ், ஒரு வர்த்தகராகவும் விளங்குகிறார். தாம் உதவித் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டால், கட்சிக்கு அதிகமான இளம் வாக்காளர்களையும், நிபுணத்துவ தொழில் சார்ந்தவர்களையும் கொண்டு வர முடியும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.