ஏர் ஆசியா விமானம் தரையிறக்கம் – விசாரணை நடத்தப்படும்

கோலாலம்பூர், மார்ச்.28-

ஏர் ஆசியா விமானம் ஒன்று, நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கேஎல்ஐஏ 2 இல் அவசரமாகத் தரை இறங்கியது குறித்து மலேசிய வான் போக்குவரத்து கழகமான CAAM விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரிலிருந்து இரவு 9.59 மணியளவில் சீனா, Shenzhen- னுக்கு, 171 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் புறப்பட்ட அந்த ஏர்பஸ் A320 விமானத்தின் வலப்புற இயந்திரத்தில் தீப்பிடித்துக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், அந்தத் தகவலை ஏர் ஆசியா மறுத்துள்ளது.

எனினும் ஏர்பஸ் விமானம், மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி, அவசரமாகக் தரையிறங்கியது தொடர்பில் உண்மையான காரணத்தைக் கண்டறிவற்கு மலேசிய வான் போக்குவரத்து கழகம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

விமானங்களின் எந்தவோர் அவசர தரையிறக்கமும் CAAM அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS