அல்பன துறைமுகம், மார்ச்.28-
அரிசி, பட்டாசுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் உட்பட சுமார் 18.36 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் கடத்தலை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
மலாக்கா, பேரா, பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பதிவுப் பெற்ற கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக அரச மலேசிய சுங்கத்துறை உதவி தலைமை இயக்குநர் டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் சுலைமான் தெரிவித்தார்.
இன்று கோலக் கிள்ளான் துறைமுகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.