ஷா ஆலாம், மார்ச்.28-
நாட்டில் இனங்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான விவகாரங்கள் குறித்து கருத்துரைப்பதற்கு முன்னதாக சட்ட ரீதியாக ஏற்படக்கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்குமாறு சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாம், கூட்டரசின் மதமாகும். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல நாட்டு மக்களில் பெரும் பகுதியினரைப் பிரதிநிதிக்கிறது. எனவே இஸ்லாத்தின் நிலைக்கு அனைத்து தரப்பினரும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் நாட்டில் இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், வளப்பத்தையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமையாகும்.
எந்தவொரு மதத்தின் உணர்ச்சிகரமான விவகாரங்களையும் விமர்சிப்பதற்கு சமூக வலைத்தளங்களை ஒரு சாதனமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் நினைவுறுத்தினார்.