கோலாலம்பூர், மார்ச்.28-
கோலாலம்பூர் ஒற்றைக் கோபுரத்தை நிர்வகிப்பதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட மெனாரா கேஎல் செண்டிரியான் பெர்ஹேட் நிறுவனம், 100 கோடி ரிங்கிட் இழப்பீடு கோரி, அரசாங்கம் உட்பட இன்னும் சில தரப்பினருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
Hydroshoppe Sdn. Bhd. நிறுவனத்தின் துணை நிறுவனமான மெனாரா கேஎல் செண்டிரியான் பெர்ஹாட், தங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தததை அரசாங்கம் மீறிவிட்டதாக தனது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளமாக விளங்கும் மெனாரா கோலாலம்பூர் கோபுரத்தை நிர்வகிப்பதற்கான குத்தகையை 15 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டு காலமாக புதுப்பிப்பது உட்பட கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டை அரசாங்கம் மீறிவிட்டதாக மெனாரா கேல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.