வர்த்தகருக்கு 6 ஆண்டு சிறை, 22 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கிள்ளான், மார்ச்.28-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நோன்பு இருந்தார் என்பதற்காக தனது மெய்க்காவலரைக் கடுமையாக தாக்கி, அச்சுறுத்தி, அவமதித்த குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு, 10 மாத சிறைத் தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

சுங் சீ யாங் என்ற 47 வயதுடைய அந்த வர்த்தகருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திருத்தப்பபட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியே என்று மாஜிஸ்திரேட் சித்தி ஸுபைடா மாஹாட் தீர்ப்பு அளித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 10,30 மணியளவில் கிள்ளான், ஜாலான் பத்து நீலாம் 9, பண்டார் புக்கிட் திங்கி, கிள்ளான், என்ற முகவரியில் உள்ள தனது வீட்டில் 44 வயது அஸ்மினிஸாம் சுல்கிப்ளி என்ற மெய்க்காவலரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக சுங் சீ யாங்கிற்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தன் வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும், 10 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

WATCH OUR LATEST NEWS