வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச்.28-

பிகேஆர் கட்சியின் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் நடவடிக்கைக் குழு இன்று அறிவிக்கவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் புஃசியா சாலே தெரிவித்துள்ளார்.

தொகுதி அளவிலும், இதர உயர் மட்டப் பதவிகளுக்கும் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்களை எதிர்த்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கு கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வேட்பாளர்களின் பெயர்கள் உறுதிச் செய்யப்பட்டு, தேர்தல் நடவடிக்கைக் குழுவினரால் அறிவிக்கப்படவிருக்கிறது. முதலில் தொகுதி அளவில் போட்டியிடுகின்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

தொகுதி தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பகாங், குவாந்தானில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் புஃசியா சாலே இதனைத் தெரிவித்தார்.

தேசிய அளவிலான தேர்தல் வரும் மே 25 ஆம் தேதி நடைபெறும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS