பெட்ரோல் ரோன் 95 சலுகைத் திட்டத்தில் 90 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவாதம்

ஷா ஆலாம், மார்ச்.28-

வரும் ஜுன் மாதம் அமலுக்கு வரவிருக்கும் இலக்கிடலப்பட்ட ரோன் 95 பெட்ரோல் மானியத் திட்டத்தில் 90 விழுக்காடு மக்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

ரோன் 95 பெட்ரோலுக்கு தற்போது வழங்கி வரும் சலுகைத் திட்டம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று பிரதமர் உறுதி தெரிவித்தார்.

ஜுன் மாதம் அமல்படுத்தப்படவிருக்கும் ரோன் 95 பெட்ரோல் இலக்கிலடப்பட்ட திட்டத்தில், சாமானிய மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தற்போது அவதூறும், தவறான பிரச்சாரங்களும் கட்டவிழ்க்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இது போன்ற அவதூறான தகவல்களை மக்கள் எளிதில் நம்பி விட வேண்டாம் என்று அன்வார் கேட்டுக் கொண்டார். உதாரணத்திற்கு அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது. அதில் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தது. அது போலவே ரோன் 95 பெட்ரோல் இலக்கிலிடப்பட்ட மானியத் திட்டத்திலும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

எனினும் இந்த இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தில் அந்நிய நாட்டவர்களுக்கும், மிகப் பெரிய பணக்காரர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS