மியன்மார் நிலநடுக்கம்: அவசரகால நிர்வாக முறையை முடுக்கி விட்டது WHO

ஜெனிவா, மார்ச்.28-

மியான்மாரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து உலக சுகாதார நிறுவனமான (WHO) அதன் அவசரகால நிர்வாக முறையை முடுக்கி விட்டுள்ளது. அது தற்போது துபாயில் உள்ள அதன் மையமொன்றை மோசமான  காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களை வழங்குவதற்கு நகர்த்துகிறது. 

ஜெனீவாவில் உள்ள தலைமையகத்தில் இருந்து இந்த பூகம்பத்திற்கான உதவி நடவடிக்கைகளை WHO ஒருங்கிணைக்கிறது. அந்நிலநடுக்கம் மிகவும் கடுமையானது. உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக அது குறிப்பிட்டது. 
 
2023 இல் துர்கியே-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை கையாள்வதில் WHO இன் அனுபவத்தின் அடிப்படையில், இது அத்தியாவசிய மருந்துகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்தும். அதே நேரத்தில் மியன்மாரிலத சுகாதார உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்திருக்கலாம் என்றும் அது கூறியது. 

WATCH OUR LATEST NEWS