கோல பேராங், மார்ச்.28-
கிழக்குக் கரையோர நெடுஞ்சாலையான LPT2இல் இன்று அதிகாலையில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமுற்றனர்.
இச்சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் திரெங்கானு, அஜிலுக்கும், தெலெமோங்கிற்கும் இடையில் நிகந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் அந்த மருத்துவர் பயணித்த வாகனம், எதிரே சென்ற முட்டை லோரியுடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் 42 வயது நூர் ஷிர்லீனா இர்மா ஙா என்ற மருத்துவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உலு திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் அப்துல் வாஹாப் தெரிவித்தார்.
ஷா ஆலாம் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அந்த மருத்துவர், ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஷா ஆலாமிலிருந்து கிளந்தானை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.