158 விரைவு பேருந்துகளுக்கு தடை விதிப்பு

கோலாலம்பூர், மார்ச்.28-

சாலையைப் பயன்படுத்தத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட் 158 விரைவு பேருந்துகள், போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் உள்ள பஸ் முனையங்கள் மற்றும் டிப்போக்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சம்பந்தப்பட்ட விரைவு பேருந்துகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாஃட்லி ரம்லி கூறினார்.

தடை உத்தரவு நோட்டீஸ் வழங்கப்பட்ட விரைவு பேருந்துகளில் அடையாளம் காணப்பட்ட பழுதுகளை அதன் உரிமையாளர்கள் சரி செய்தால் மட்டுமே அவை மீண்டும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் சுங்கை பீசி டோல் சாவடியில், தெற்கு வழி தடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS