கோலாலம்பூர், மார்ச்.28-
வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடையில் கட்டாயமாக ஜாலூர் கெமிலாங் பேட்ஜை அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டாலும் அவ்வாறு அணியத் தவறும் மாணவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றை விதைக்கும் அரசாங்கத்தின் இந்த முயற்சியானது, குடியியல் தன்மையில் ஊக்குவிக்கப்படுகிறதே தவிர பலவந்தமான நடவடிக்கை அல்ல என்று கல்வி அமைச்சு தெரிவுப்படுத்தியுள்ளது.
எனவே ஜாலூர் கெமிலாங் பேட்ஜை அணியாத மாணவர்களுக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்கள் அனைவருக்கும் ஜாலூர் கெமிலாங் பேட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.