ஷா ஆலாம், மார்ச்.28-
இன்று மியான்மார் நாட்டில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்ட போது, அதில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மியன்மாருக்கான மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.