கோலாலம்பூர், மார்ச்.28-
சீன அதிபர் Xi Jinping- கின் அதிகாரத்துவ வருகையை ஏற்றுக் கொள்வதற்கு மலேசியா தயாராகிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், உணர்ச்சிகரமான அரசியல் விவகாரங்களை விவேகப் போக்குடன் மிக கவனமாகக் கையாளுமாறு அனைத்து தரப்பினரையும் தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் சான் பூஃங் ஹின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியா – சீனா இருவழி உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணத்தில், இன மற்றும் சித்தாந்தங்கள் ரீதியான உணர்ச்சிகரமான விவகாரங்களை சில தனிநபர்கள் எழுப்பக்கூடுமோ என்ற தாம் அச்சம் கொள்வதாக சான் பூஃங் ஹின் குறிப்பிட்டார்.
இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சீனா – மலேசியா சிந்தனைக் குழாம் ஆய்வரங்கை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.