சோதனையின்றி அந்நிய நாட்டவரை நாட்டிற்குள் நுழைய அனுமதித்த குடிநுழைவு அதிகாரி கைது

கோலாலம்பூர், மார்ச்.28-

கோலாலம்பூர் அனைத்துக விமான நிலையத்தில் டெர்மினல் 1 இல், அந்நிய நாட்டவர் ஒருவரின் ஆவணங்கள் சோதனையின்றி அவரை நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட முகப்பிடத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் கடமையில் இருந்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

அந்த அந்நிய நாட்டவர்கள் தப்பித்தது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள நேர்மைப் பிரிவு அளித்த புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த அதிகாரியைச் சோதனையிட்ட போது, அவரின் ஜேக்கெட்டில் ஒன்பது பாகிஸ்தான் கடப்பிதழ்கள், இரண்டு இலங்கை கடப்பிதழ்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குடிநுழைவு அதிகாரிகளே இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவது சகித்துக்கொள்ள முடியாது என்று டத்தோ ஸாகாரியா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS