கோலாலம்பூர், மார்ச்.28-
ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்காக பலர் தங்கள் கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று காலையில் சீராக இருந்த வாகனப் போக்குவரத்து, மாலை 4.15 மணிக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ், கோலாலம்பூர் காராக் நெடுங்சாலை ஆகியவற்றில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
பிளஸ் நெடுஞ்சாலையில் வடக்கை நோக்கி, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் ரவாங்கிற்கு அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று 341.6 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்து காரணமாக சுங்கைக்கும், சுங்கை பீடோருக்கும் இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.