தடுப்புக் காவலில் இருந்து ஜம்ரி விடுவிக்கப்பட்டு விட்டார்- பெர்சத்து கட்சி கூறுகிறது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.28-

கோலாலம்பூர் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இட மாற்ற விவகாரத்தில் நிந்தனைத் தன்மையிலான விமர்சனங்களை முகநூலில் வெளியிட்டு பொது அமைதிக்குக் குத்தகம் விளைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, 2 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத், இன்று மதியம் விடுவிக்கப்பட்டு விட்டதாக பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பாட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் தெரிவித்துள்ளார்.

41 வயதுடைய அந்த சமயப் போதகரை விசாரணைக்கு ஏதுவாக 2 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று காலையில் போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

எனினும் ஜம்ரியை உடடினயாக விடுவிக்கக் கோரி, மக்கள் கூட்டம் பெரியளவில் திரண்டு, அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து ஜம்ரி வினோத், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாகவே கங்கார் போலீஸ் காவலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக பெர்சத்து கட்சியின் அரசியல் விவகாரத் தலைவர் பாட்ரூல் ஹிஷாம் குறிப்பிட்டார்.

இன்று காலை 9 மணிக்கு கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜம்ரி வினோத்தை இன்று மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நாளை 29 ஆம் தேதி வரை இரண்டு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஆனா ரொஸானா முகமட் நோர் அனுமதி அளித்திருந்த வேளையில் அவர் நண்பகலில் போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

WATCH OUR LATEST NEWS