மியான்மார், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் – கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்தன

பாங்காக், மார்ச்.28-

மியன்மாரிலும், தாய்லாந்திலும் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கும் உலுக்கியது. இதில் மூவர் உயிரிழந்த வேளையில் 90 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மியன்மாரில் இன்று காலை 11.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, மியான்மாரின் தலைநகரான Naypyidaw- லிருந்து வடகிழக்கே அமைந்துள்ள Sagaing,பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மியான்மாரின் Monywa- பகுதியை மையமாகக் கொண்டு இது பதிவாகியுள்ளது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

மியான்மாரைத் தொடர்ந்து, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 7.7 ஆக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, பேங்காக்கில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இதனால், இதில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS