அந்தோணி லோக் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்

சிப்பாங், மார்ச்.29-

ஹரிராயா பெருநாளை மக்கள் குதூகலத்துடன் வரவேற்கவிருக்கும் இவ்வேளையில் டிரெய்லர் லோரி மற்றும் கார் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் , மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

டிரெய்லர் லோரியின் முன் டயர் வெடித்ததன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த அந்த கனரக வாகனம், சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்த்திசை வழித்தடத்தில் நுழைந்ததால் எதிரே வந்த காரை மோதி, தீப்பற்றிய நிலையில் ஐவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியின் போக்குவரத்து நிறுவனம், தற்போது விசாரணைக்கு இலக்காகியிருப்பதாகவும், நடப்பு பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டு இருக்குமானால் அந்த நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS