பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், மார்ச்.29-

நாட்டின் முன்னணி நெடுஞ்சாலைகளில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பலர் தங்கள் கிராமங்களுக்குச் செல்லத் தொடங்கியிருப்பதால் வாகனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ், கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலை போன்றவற்றில் வாகனப் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது.

எனினும் வாகன போக்குவரத்து நிலைக்குத்தும் நிலை இல்லை என்ற போதிலும் அவை மெதுவாக நகர்வதாக அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS