மியான்மாரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 694 பேராக அதிகரித்தது

மியன்மார், மார்ச்.29-

மியான்மாரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 694 பேராக அதிகரித்துள்ளது. 1,670 பேர் காயமுற்றனர். 68 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் மியன்மாரில் பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. போர்க்கால அடிப்படையில் உதவிகள் நல்கப்படுவதற்கு அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் மியன்மாரின் மத்திய பிரதேசமாக Mandalay பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுமையாகச் செயல் இழந்துள்ளது. தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடரில் கட்டங்களின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு பன்னாட்டு உதவிகள் கரம் நீட்டப்பட்டுள்ளது. இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மீட்புப்படையினர் யங்கோன் வந்தடைந்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS