சவக்குழி தோண்டுபவர், குழி தோண்டிக் கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்தது

கோத்தா பாரு, மார்ச்.29-

சவக்குழி தோண்டும் பணியாளர் ஒருவர், முன்ளாள் இமாம் ஒருவரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்து கொண்டிருந்த போது அவரின் உயிர் பிரிந்தது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை, கிளந்தான், கோத்தாபாரு, கம்போங் பாடாங் காலா, மெலோர் என்ற இடத்தில் உள்ள மையத்துக் கொல்லையில் நிகழ்ந்தது. 55 வயது ஹாலிம் மாட் ராஸி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

மயங்கி விழுந்த அந்த நபரை அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS