கோலாலம்பூர், மார்ச்.29-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தொகுதி தேர்தலில் கூட்டரசு பிரதேசம், பத்து தொகுதியில் அதன் நடப்புத் தலைவரும், பத்து நாடாளுமனற உறுப்பினருமான P. பிரபாகரனை எதிர்த்து வழக்கறிஞர் ஆஷிக் அலி போட்டியிடுகிறார்.
பிகேஆர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பத்து தொகுதியில் இரண்டாவது முறையாக தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடவிருக்கும் மித்ரா தலைவர் பிரபாகரனை எதிர்த்து, தாம் போட்டியிடவிருப்பதாக ஆஷிக் அலி அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிகேஆர் தேர்தலில் பத்து தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அத்தொகுதியின் பிகேஆர் தலைவரான தியான் சுவானை பிரபாகரன் தோற்கடித்து, புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்முறை பிரபாகரனை எதிர்த்து முன்னாள் மாணவரும், சமூக ஆர்வலருமான ஆஷிக் அலி போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.