பத்து காவான், மார்ச்.29-
மியன்மார் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய நில நடுக்கம், பினாங்கை பாதிக்கவில்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் ஒன் யோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 11.50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்த்தின் அதிர்வுகள், பினாங்கில் பல பகுதிகளில் உணர முடிந்தது என்றாலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படத்தவில்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படையினரும், விரிவான ஆய்வை மேற்கொண்டதில் நிலநடுக்கம் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதாக பொது மக்களிடமிருந்து எந்தவொரு அவசர அழைப்பையும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சோவ் கோன் யோவ் விளக்கினார்.