கோலாலம்பூர், மார்ச்.29-
கோலாலம்பூர் மாநகரில் பலூன் வியாபாரிக்கும், மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பலவந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பெஃண்டி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பலூன் வியாபாரி லைசென்ஸின்றி பலூன் வியாபாரம் செய்ததாக புகார் பெறப்பட்டுள்ளது. பலூன் வியாபாரிக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது, தகராறு ஏற்பட்டது.
இதன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியை அடிப்படையாக கொண்டு இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி சுலிஸ்மி குறிப்பிட்டார்.