காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்

கோலாலம்பூர், மார்ச்.30-

தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் பலூன் வியாபாரியை கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் சுலிஸ்மி சுலைமான் தெரிவித்தார். “இதுவரை வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. சாட்சிகள், சிசிடிவி பதிவுகளுடன் விசாரணை அறிக்கையைப் பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அபாங் பலூன் என்றழைக்கப்படும் சம்பந்தப்பட்ட பலூன் வியாபாரியின் குடும்பத்தினரிடமிருந்து ஒரு காவல் துறைப் புகாரும் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஊகங்களையும் யாரும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை சுலிஸ்மி கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS