ஒரு வயது குழந்தை தந்தையின் காரில் மோதி மரணம்

ஜோகூர் பாரு, மார்ச்.30-

நேற்று, ஜோகூர் பாரு, தாமான் டேசா ஹார்மோனியில் உள்ள ஒரு வீட்டின் தனது புரோட்டோன் X50 காரை நகர்த்திய போது, ஒரு வயது குழந்தை தனது தந்தையால் மோதப்பட்டு இறந்ததாக நம்பப்படுகிறது. அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 27 வயதான அக்குழந்தையின் தந்தை தனது காரை நகர்த்தும் போது, இடது பக்க பின்புற சக்கரத்தில் அந்தக் குழந்தை தலையில் பலத்த காயமடைந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

உடனடியாக குழந்தை சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு முன் குழந்தைகள் குறிப்பாக சிறிய குழந்தைகளின் இருப்பிடம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை காலங்களில் வாகனமோட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவசரப்படவோ அல்லது கவனக்குறைவாகவோ வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

WATCH OUR LATEST NEWS