டிபிபியின் நடப்புத் தலைவரை ஆதரித்தார் முன்னாள் தலைவர்

கோலாலம்பூர், மார்ச்.30-

அரசு நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு ஊழியர்களை டேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் தற்போதைய தலைவர் ஹாஸாமி ஜாஹாரி கண்டித்ததை ஆதரித்தார் அதன் முன்னாள் தலைவர் அபாங் சலேஹூடின் அபாங் ஷோகேரான். அதிகாரப்பூர்வ விவகாரங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்த முன்னாள் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் ரேமன் நவரத்னம், முன்னாள் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ரபிஃடா அஸிஸ் ஆகியோருக்குப் பதிலளித்த சலேஹூடின், அவர்கள் ஆங்கிலத்தை அதிகமாகப் புகழ்ந்து, “நம்முடைய சொந்த மொழிக்கு கலாச்சார அடிப்படையில் வலிமை உள்ளது என்பதை மறந்துவிட்டனர்” என்றார்.

“டிபிபி எப்போதும் வலியுறுத்துவது மலாய் மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள், ஆனால் வெளிநாட்டு மொழிகளான ஆங்கிலம், தமிழ், அரபு, சீனம் போன்றவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார். கூட்டரசு அரசியலமைப்பின் 152 வது பிரிவு மலாய் மொழியைத் தேசிய மொழியாக வழங்குகிறது என்றும், தேசிய மொழிச் சட்டத்தின்படி, அனைத்து அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும் மலாய் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “வரலாற்று அடிப்படையில் நாம் சில கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டும் வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்தக்கூடாது” என்று அவர் கூறினார்.

பொதுச் சேவைத் துறை தேசிய மொழியைப் பயன்படுத்த உத்தரவிடும் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், இரண்டாவது மொழியாக மற்ற மொழிகளையும் பரிசீலிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

‘Car-free Morning’ என்பதனை Pagi Tanpa Kereta’,” எனவும் Back to School என்பதற்கு Kembali ke Sekolah எனவும் முதன்மையாகப் பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS