குவாந்தான், மார்ச்.30-
இன்று, பகாங், பெந்தோங் அருகே உள்ள கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 50.7வது கிலோமீட்டரில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். பிற்பகல் 4.55 மணியளவில் நடந்த விபத்தில் மேலும் மூன்று வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகள் உட்பட எட்டு பேர் காயமின்றி உயிர் தப்பினர் என்று பகாங் தீயணைப்பு, மீட்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஸுல்பாஃட்லி ஸாகாரியா தெரிவித்தார்.
ஐந்து டன் லாரியோடு ஹோண்டா அக்கோர்ட், புரோட்டோன் வாஜா, புரோட்டோன் சாகா, சுபாரு ஆகிய நான்கு கார்கள் விபத்தில் சிக்கின. ஹோண்டா அக்கோர்ட் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் காரில் இருந்த மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ஐந்து டன் லாரி ஓட்டுநரும் காயமடைந்தார்.