சிரம்பான், மார்ச்.30-
நேற்று, சனிக்கிழமை, சிரம்பான் ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 4ங்கில் நடந்த சம்பவத்தில் பெண் ஓட்டுனரைத் தாக்கிய இராணுவ வீரர் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 35 வயதுடைய அந்த ஆடவர் வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டார்.
“28 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கியதற்காக குற்றவியல் தடுப்புச் சட்டம் பிரிவு 323 இன் கீழ் விசாரணை தொடர்கிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் வலது விலா எலும்பு பகுதியில் சிராய்ப்புகளும் தலையின் பின்புறத்தில் வீக்கமும் ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவரின் காரைச் சேதப்படுத்தியதற்காக பிரிவு 427 இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது,” என்று சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் முகமட் ஹத்தா சீ டின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.