கோலாலம்பூர், மார்ச்.30-
இன்று தலைநகரில் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டினரின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்கப் பிரிவு, நடவடிக்கை எடுத்தது. நகர மையத்தில் உரிமம் இல்லாமல் வெளிநாட்டினர் மீன், காய்கறிகள், ஆடைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு மேற்கொண்டு வருவதாகவும், தற்பொழுது இந்த நடவடிக்கைக்குரிய இடத்திற்கு அமலாக்கப் பிரிவினர் சென்றடைந்துள்ளனர் என்றும் மாநகர் மன்றத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிப் கூறினார்.