ஒழுங்கு முறையையும் நீதியையும் உறுதிப்படுத்த சட்ட அமலாக்கம் முக்கியம்

கோலாலம்பூர், மார்ச்.30-

உரிமம் பெற்ற வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஒழுங்கு முறையும் நீதியையும் உறுதிப்படுத்த சட்ட அமலாக்கம் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறது எம்சிடபள்யூ எனப்படும் Malaysia Corruption Watch அமைப்பு. கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவின் சிறு வணிகர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான சம்பவத்தை MCW தீவிரமாக எடுத்துள்ளது. அமலாக்க அணுகுமுறை மாந்தநேயம், நீதி, விவேகம் ஆகிய கொள்கைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று அதன் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் கூறினார்.

சட்ட அமலாக்கத்திற்கும் மக்களின் நலனுக்கும் இடையே சமநிலையை அடைய நியாயமான நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று MCW பரிந்துரைக்கிறது. அமலாக்கப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு சிக்கல் மேலாண்மை, பயனுள்ள தகவல் தொடர்பு, விவேகம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சாதாரண வாழ்வாதாரத்தைத் தேடும் சிறு வணிகர்களைக் கையாளும் போது வன்முறை நடவடிக்கைகள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று MCW கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS