சக மனிதர்களின் கண்ணியத்தை உயர்த்துவதன் முக்கியத்துவம்

கோலாலம்பூர், மார்ச்.30-

நாளை மலேசியாவில் இஸ்லாமியர்கள் கொண்டாடவிருக்கும் ஈகைத் திருநாளையொட்டி, karamah insaniah கருத்தின்படி சக மனிதர்களின் கண்ணியத்தை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு நினைவூட்டினார். சுதந்திரமான, உன்னதமான மனிதர்களான மக்கள், நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் உறுதிப்படுத்த, பரஸ்பர மரியாதை, கருணை, அன்பு ஆகியவற்றின் மூலம் இனங்களுக்கிடையேயும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடனும் உறவுகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டு ஈகைத் திருநாள், தகுதியான, ஒழுக்கமான, நேர்மையான மனிதர்களாக நம் கண்ணியத்தை உயர்த்தும் முயற்சியில் இதேபோன்ற விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இரமலான் மாதத்தில், அமைச்சுகளும் மாநிலங்களும் ஏற்பாடு செய்த Program Ihya’ Ramadan நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், மக்களின் குறைகளைக் கேட்டதாகவும் அன்வார் கூறினார். அந்த நிகழ்ச்சிகளில், கூட்டரசு, மாநில, ஊராட்சி மன்றங்கள் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் திறனையும் முறைகளையும் அவர் நேரடியாகக் கண்டதாக தமது ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS