நாளை ஈகைத் திருநாள் ! அறிவித்தார் மன்னர்களின் முத்திரைக் காப்பாளர்

கோலாலம்பூர், மார்ச்.30-

மலேசியாவில் இஸ்லாமியர்கள் நாளை மார்ச் 31 ஆம் தேதி, ஈகைத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். மன்னர்களின் முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சையிட் டானியல் சையிட் அஹ்மாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஈகைத் திருநாள் தேதி அறிவிப்பு உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி ஒளிபரப்புகள் மூலம் வெளியிடப்பட்டது.

“மாட்சிமை தங்கிய மாமன்னர் அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையில், மாட்சிமை தங்கிய மன்னர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஈகைத் திருநாள் தேதி மார்ச் 31 திங்கட்கிழமை என அறிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார். ஈகைத் திருநாள் தேதியை நிர்ணயிக்கும் முறை Rukyah, Hisab ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று மன்னர்களின் சபை ஒப்புக் கொண்டது.

WATCH OUR LATEST NEWS