கைகலப்பு: ஆறு பேர் கைது

அம்பாங், ஏப்ரல்.01-

கோலாலம்பூர், மேடான் ஶ்ரீ கெராமாட்டில் நேற்று அதிகாலையில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலீசார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் இன்று விடியற்காலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் உலு கிள்ளான் போலீஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட ஆறு பேரில் இருவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

இந்த கைகலப்பில் ஒருவர் காயமுற்று, அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரவித்தார்.

6 பேரையும் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அஸாம் இஸ்மாயில் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS