குளுவாங், ஏப்ரல்.01-
இரண்டு வாகனங்கள், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் ரெங்காம்-லாயாங்-லாயாங் சாலையின் 25 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
ஹோண்டா ஸ்டிரிம் வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஹோண்டா சிட்டி ரக காரை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். காயமுற்ற 14 பேர், குளுவாங், Enche Besar Hajjah Khalsom மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.