நீர் வீழ்ச்சியில் மூவர் காப்பாற்றப்பட்டனர், ஒருவர் காணவில்லை

ஜாசின், ஏப்ரல்.01-

ஹரிராயா விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்காக மலாக்கா, ஜாசின், அசஹானில் உள்ள லாமான் தீகா புடாயா நீர் வீழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், திடீரென்று ஏற்பட்ட நீர் பெருக்கத்தினால் மூவர் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 4.54 மணியளவில் நிகழ்ந்தது. மலைப்பாறை முகட்டிலிருந்து நீர் பெருக்கு திடீரென்று அதிகமானதால் குளித்துக் கொண்டு இருந்தவர்களில் நால்வர் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் மூவர் பொது மக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர். ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தங்காக் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் காணாமல் போனவரைத் தேடும் பணி துரித வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS