ஜோகூர் பாரு, ஏப்ரல்.01-
12 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கினால் மோதப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று காலை 9.45 மணியளவில் ஜோகூர் பாரு, கம்போங் ஶ்ரீ அமான், லோரோங் கெம்பீராவில் நிகழ்ந்தது.
65 வயதுடைய அந்த முதியவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, 12 வயது சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிளினால் மோதப்பட்டு பலத்த காயத்திற்கு ஆளானதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
அந்த முதியவர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவர் உயிர் பிரிந்தது.
இச்சம்பவத்தில் அந்த சிறுவனும் காயத்திற்கு ஆளானார். 1987 ஆம் ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.