ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.01-
பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் நேற்றிரவு, பட்டாசு விற்பனை வளாகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.
பட்டாசு விற்பனை வளாகத்தைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.
கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் குழு விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைகலப்பு தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் இந்த அடிதடியில் ஈடுபட்ட 15 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக சஸாலி அடாம் தெரிவித்தார்.