பாடாங் ஈப்போவில் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை

ஈப்போ, ஏப்ரல்.01-

ஈப்போ, பாடாங் ஈப்போவில் பொது மக்கள் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் தூய்மையையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சாண்ரியா ங் ஷாய் சிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணிகளும், பொது மக்களும் அதிகமாக வருகை தரும் முக்கிய சுற்றுலாப் பகுதியான ஈப்போ பாடாங், ஓர் அசுத்தம் நிறைந்த பகுதியாகச் சித்தரிக்கப்படுவதைத் தவிர்க்கவும், ஈப்போ மாநகர் மன்றத்தின் தோற்றத்தைப் பாதுகாக்கவும் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாண்ரியா ங் குறிப்பிட்டார்.

தவிர, புறாக்களின் எச்சம், மூச்சுத் திணறல், மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாக பொது மக்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS