கோலாலம்பூர், ஏப்ரல்.01-
பெட்ரோனாசுக்கு சொந்தமான நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து, தீப் பரவிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது.
எரிவாயு குழாய் எவ்வாறு வெடித்தது மற்றும் மூலக் காரணங்கள் யாவை என்பது குறித்து உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் பாஃட்லி ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இந்த ஆய்வு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.