கோலாலம்பூர், ஏப்ரல்.01-
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அரசாங்கத்தின் சாரா உதவித் தொகை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ஏப்ரல் முதல் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகையானது இம்முறை ஆண்டுக்கு 2,100 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1,200 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெறுநர், மாதம் தோறும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறிப்பிட்ட கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முன்பு சாரா உதவித் தொகையை 7 லட்சம் பேர் பெற்ற நிலையில், இம்முறை 54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.