பலத்த வெடிச் சத்தத்துடன் நெருப்பு உக்கிரமாக எழுந்தது

சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-

பலத்த வெடிச் சத்தத்துடன் திடீரென்று உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாக சுபாங் ஜெயா, புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட தீச் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில் அருகில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் தலைவர் ஏ. அர்வின் தெரிவித்தார்.

காலை 8 மணியளவில் இந்த வெடிச் சத்தம் கேட்டது. அதன் பின்னரே தீயணைப்பு வண்டிகள் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தீயின் ஜுவாலை உக்கிரமாக வானை நோக்கி எழும்பிய போது அருகில் இருக்கும் வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

காயமுற்றவர்களுக்கு இயன்ற அளவில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு தங்களின் கோவில் திறந்து விடப்பட்டதாக அர்வின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS