சிரம்பான், ஏப்ரல்.01-
சாலையில் ஏற்பட்ட தகராற்றில் பெண் வாகனமோட்டிக்கு காயம் ஏற்படும் அளவிற்கு அவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படும் ராணுவ வீரர் ஒருவர், சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீசாரின் விசாரணைக்கே தாங்கள் விட்டு விடுவதாக மலேசிய தரைப்படை அறிவித்துள்ளது.
மூன்று தினங்களுக்கு முன்பு, சிரம்பான், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 4 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை இராணுவப்படை கடுமையாகஒ கருதுவதாக அதன் தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் தெரிவித்தார்.
அந்த வீரரின் செயல், இராணுவப்படையின் தோற்றத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த இராணுவ வீரர் தற்போது விசாரணையில் உள்ளார். இது குறித்து மேலும் கருத்துரைக்கத் தாம் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.