கோலாலம்பூர், ஏப்ரல்.01-
பல மணி நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீயை முழு வீச்சாகக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட தீயணைப்பு, மீட்புப் படையினருக்கும், இதர அரசாங்க ஏஜென்சிகளுக்கும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.
இறைவன் அருளில் எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படாமல் அனைவரும் காப்பாற்றப்படுவற்கு முழு வீச்சில் கடமையாற்றிய பாதுகாப்புப் படையினருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளத் தாம் கடமைப்பட்டுள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
சுபாங் ஜெயாவில் கொழுந்துவிட்டு எரிந்த இந்த தீச் சம்பவத்தை பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து தெளிவாகக் காணும் அளவிற்கு தீ, வானை நோக்கி முட்டியது.
இத்தீ, பிற்பகல் 1.55 மணியளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.