சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-
தீ விபத்தில் தங்கள் வீடுகள் கடுமையாகச் சேதமுற்ற நிலையில் தங்குவதற்கு அடைக்கலம் நாடிய பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிமாக தங்குவதற்கு சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மமன் ஆலயம், தனது மண்டபத்தைத் திறந்துள்ளது.
இந்த தீச் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கோவில் வளாகத்தைத் திறந்து விட்ட அதன் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான நிவாரணத்தையும் வழங்கியுள்ளது.
காயமுற்றவர்கள் உதவிக் கோரி அலறிய நிலையில் அவர்களுக்கு அபயம் அளிப்பதற்கு கோவில் மண்டபத்தை உடனடியாக திறந்து விடுவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்ததாக அதன் ஆலோகர் ஆர். மாணிக்கவாசகம் தெரிவித்தார்.
ஆலயத்தைச் சேர்ந்த மருத்துவ தன்னார்வாலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.