மொத்தம் 190 வீடுகள் பாதிக்கப்பட்டன, 148 கார்கள் சேதம்

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் மொத்தம் 190 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 148 கார்கள் சேதமுற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தடி எரிவாயு குழாய்கள் வெடித்து, தீ ஏற்பட்ட பகுதியிலிருந்து 290 மீட்டர் தொலைவில் உள்ள புத்ரா ஹைட்ஸில் இரண்டு வீடமைப்புப் பகுதிகளிலும், அதன் அருகாமையிலும் மொத்தம் 190 வீடுகள் கடுமையாகச் சேதமுற்றதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வீடமைப்புப் பகுதிகளிலும் மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் விலை உயர்ந்த கார்கள் உட்பட மொத்தம் 148 கார்களும், 12 மோட்டார் சைக்ளிகளும் சேதமுற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மாலை 3.40 மணி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரஸாலி தெரிவித்தார்.

தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நடப்பு நிலை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS